சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் இரும்பு கேட் (iron gate) விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் காவலாளியாகி பணிபுரிந்து வருபவர் சங்கர். இவரது மனைவி வாணி. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை இருந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் (iron gate) எதிர்பாராத விதமாக சாய்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த காவலாளியின் ஐந்து வயது மகள் ஹரிணி மீது இரும்பு கேட் விழுந்தது. இதனால், சிறுமி பலத்த காயம் அடைந்தார்.
இதனையடுத்து, உடனடியாக காயம் அடைந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிறுமி ஹரிணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
மேலும், இந்த சோக சம்பவம் காவலாளியாக பணிபுரியும் தனது தந்தையை காண சிறுமி ஹரிணி தனது தாயுடன் வந்தபோது இந்த நடந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட நிலையில், தகவல் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக, சம்மந்தப்பட்ட துணிக்கடையின் காவலாளி சம்பத் மற்றும் கடை மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.