வாட்சப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி சென்னை திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக, பயண அட்டை முறை, ‘க்யூ ஆர்’ குறியீடு முறை போன்றவை நடைமுறைகள் உள்ள நிலையில் 8300086000 என்ற கைப்பேசி எண்ணுக்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி டிக்கெட்களை பெறலாம்

வாட்ஸ்ஆப்பே, ஜீபே, நெட்பேங்கிங் ஆகியவை வாயிலாக கட்டணம் செலுத்த பயன்படுத்தலாம். வீட்டில் இருந்து புறப்படும்போது டிக்கெட் எடுக்கலாம். பயணம் முடியும்போது, கியூ.ஆர். கோடு ஸ்கேன் செய்து வெளியே செல்லலாம்.
மேலும் கைப்பேசி மூலம் பதிவு செய்வதால் 20% சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு
சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.