சென்னை செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற்றது.இந்தப் போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 187 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் சுமார் 2 வாரங்களாக 11 சுற்றுகளாக உஸ்பெகிஸ்தான் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆர்மேனியா நாடு வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் பி அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. அதேபோல், பெண்கள் பிரிவில் உக்ரைன் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஜார்ஜியா வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியா ஏ அணி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
சென்னை ஒலிம்பியாட் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு வந்தனர்.மேலும் வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் சேலையில் உள்ள பகுதிகளில் சுற்று பயணம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க நெதர்லாந்தை சேர்ந்த கிரிட் வந்தே வெல்டே வந்தார். அவர் ஒரு இசை கலைஞர் மற்றும் Chesable வலைத்தளத்தின் CEO ஆவார். அவரும் சென்னைக்கு வந்தவர், இங்குள்ள உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிட்டார் . சமீபத்தில் கூட, தமிழ்நாட்டின் வத்தகுழம்பு தனக்கு மிகவும் பிடித்தது என்று குறிப்பிட்டார். இந்நிலையில், தனது தாய் நாடு திரும்பிய கிரிட் வந்தே வெல்டே தனது தாயுடன் வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்டு புகை படத்தை பகிர்ந்துள்ளார் .
https://twitter.com/blackatlantic?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558142566004137984%7Ctwgr%5E8e5c7ee125606d1bf5a06cd5a03bbad0070601d6%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcrazybollywood.com%2Fchess-olympiad-chessable-ceo-geert-van-der-velde-makes-dosa-with-his-mom-chess-olympiad-effect-dutch-celebrity-who-cant-forget-dosa-even-after-returning-home-cb-news%2F
இது குறித்து கிரிட் வந்தே வெல்டே தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தாய் இந்தியாவுக்கு வந்து அங்குள்ள உணவை விரும்பினார். அங்குள்ள சாப்பாட்டின் படங்களைப் பார்த்துவிட்டு, இப்போது வீட்டில் எங்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு செஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு, இணையம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.சொந்த நாட்டிற்குத் திரும்பியும், தமிழக உணவின் மீதான ஈர்ப்பு குறையாமல், அம்மாவுடன் தோசை சுடும் அவரது செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.