சென்னையில் இயங்கும் வாகனங்களின் புதிய வேக வரம்பு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஒரே நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது .
சென்னையில் தற்போது மட்டும் 62.5 லட்சம் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் சாலைப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் விதிமுறைகளை கடுமையாக்கி சென்னை போக்குவரத்து காவல்துறை புதிய வேகக் கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்திருந்தது
அதன்படி ஆட்டோக்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் பகலில் மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்திலும் இரவில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம்.
இலகு ரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் பகல் 7 மணி முதல் 10 மணி வரை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வேக வரம்பு நவம்பர் 4 நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் ஒரே நாளில் 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது .
ஏற்கனவே ஒருமுறை புதிய வேக வரம்பு விதிகள் அறிவிக்கப்பட்டபோது சென்னை மக்கள் தங்களது கண்டனங்களை வலுவாக வைத்ததால் சிறிது காலம் அது தள்ளி வைக்கப்பட்டது இந்நிலையில் மீண்டும் இந்த புதிய வேக வரம்பு விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் சென்னை வாசிகள் திணறி வருகின்றனர்.