தொடர் மழையின் எதிரொலி -பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்கள்!

chennai-rain-holidays-declared-for-schools-and-colleges
chennai rain holidays declared for schools and colleges

தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இதனை அடுத்து சாலைகள், குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai-rain-holidays-declared-for-schools-and-colleges
chennai rain holidays declared for schools and colleges

இதனிடையே வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்தம் உருவாக உள்ளதாகவும் அதன் காரணமாக கனமழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts