தமிழகத்தின் தலைநகர் சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் நடை பெற்ற நகராட்சி நி்ர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின் அடிப்படையில், புதிய மாநகராட்சி குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
அதன்படி பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
திருநீர்மலை, மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லபாக்கம் ஆகிய பேரூராட்சிகளையும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு தரம் உயர்த்தப்படுவதால் சமச்சீரான வளர்ச்சியைப் பெறும் என்பதால் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.