மதுரை ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ரவுடியை போலீசார் திரைப்பட பாணியில் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ஒரு பெண்ணை நேற்றிரவு ரவுடி குருவி விஜய் என்பவன் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளான். அப்போது அந்தப்பென் சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர், போலீசின் அவசர தொலைபேசி எண்ணான 100-க்கு போன் செய்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.
போலீசாரை பார்த்ததும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் போலீசாரை தாக்க முயன்றுள்ளனர். உடனே போலீசார் குருவி விஜய் காலில் துப்பாக்கியால் சுட்டதில், அவனுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் குருவி விஜய்யின் கூட்டாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை திரைப்படபாணியில் போலீசார் மடக்கி பிடித்ததற்காக அப்பகுதி மக்கள் போலீசாரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.