ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி-அக்கா செய்த செயல்?

sister-who-fell-into-a-deep-well-14-year-old-sister-who-was-rescued-quickly
| tamil news update | today tamil news

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி துரிதமாக காப்பாற்றியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை எனும் பகுதியில் ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்துள்ளது. இந்த கிணற்றுக்குள் சிறுமி ஒருவர் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்ட சிறுமியின் சகோதரியான 14 வயது தேவிஸ்ரீ எனும் சிறுமி உடனடியாக செயல்பட்டு ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது சகோதரியை காப்பாற்றி உள்ளார்.

தனது தங்கை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்த தேவிஸ்ரீ தங்கையின் தலைமுடியை பிடித்துகொண்டு சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அப்பகுதிக்கு வந்து சிறுமியை விரைந்து காப்பாற்றியுள்ளனர்.

sister-who-fell-into-a-deep-well-14-year-old-sister-who-was-rescued-quickly
sister who fell into a deep well 14 year old sister who was rescued quickly

அதனை தொடர்ந்து இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், ஆள்துளை கிணறு உடனடியாக மூடப்பட்டுள்ளது
தங்கை விழுந்ததும் புத்திசாலித்தனமாக யோசித்து தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Total
0
Shares
Related Posts