சென்னையில் இதுவரை 414 முதியவர்களுக்கு இல்லம் தேடி சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறைவடைந்து வந்த கொரோனா பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட உருமாறிய வைரஸான ஒமைக்ரானும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன் படி பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களின் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்படிக்க வேண்டும் எனவும், அதனை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வரும் அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொரோனா தடுப்பூகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதனைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அறுபது வயதுக்கு மேற்பய்டவர்கள், முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சென்னை மாநகராட்சி சார்பாக வீடுகளுக்கே நேரடியாக தேடி சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது வரை சென்னையில் 414 முதியவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.