சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் டெய்லர்ஸ் சாலையில் புதிய போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Change) செய்யப்பட்டுள்ளது.
ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில் பல மாற்று திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை டெய்லர்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் (Chennai Traffic Change) செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றம் 04.02.2024 முதல் 10.02.2024 வரை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Power Shutdown : சென்னையில் எந்தெந்த பகுதிகள்?
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதே வேளையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைக் கண்காணித்து, அதை சீர்செய்யும் வகையில் பல மாற்றத்திற்கான திட்டங்களைக் வரையறுத்து செயல்படுத்தி வருகின்றனர்.
போக்குவரத்து மிகுந்த இதுபோன்ற பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
வாகனங்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் போக்குவரத்தில் இத்தகைய மாற்றத்தின் ஒரு பகுதியாக, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை டெய்லர்ஸ் சாலையில் புதிய போக்குவரத்து மாற்றத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போக்கு வரத்து மாற்றத்தில் டெய்லர்ஸ் சாலையில் இருந்து கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லும் வாகனங்கள் கட்டாயமாக இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் சென்று ஈக சந்திப்பில் உள்ள U-திருப்பத்தை பயன்டுத்தி கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நவீன மாற்றுப்பாதையின் நோக்கம் டெய்லர்ஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை கூர்ந்து கண்காணிப்பதற்கு ஏதுவாக உள்ளது.
மேற்கூறிய மாற்றுப்பாதை 04.02.2024 முதல் 10.02.2024 வரை ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.