Chia seeds side effects : சியா விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உணவுகளில் ஒன்றாகும். சியா விதையில் நிறைய நார்ச்சத்து, புரதம், ஆக்ஸிஜனேற்றிகள், இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களுடன் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளன.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை சாப்பிட்டு வருகிறார்கள். ஜிகிர்தண்டா, சர்பத் போன்ற குளிர்பானங்களிலும் இதனை கலந்து விற்பனை செய்கிறார்கள்.
ஆனால், இதனை அதிகமாக சாப்பிடுவது மூச்சுத் திணறல் உள்ளிட்ட ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சியா விதைகள் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் (Chia seeds side effects) :
சியா விதைகளை அதிகமாக எடுத்துக்கொண்டால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் வாயு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சியா விதைகளில் நல்ல அளவு ஆல்பா-லினோலெனிக் அமிலம் அல்லது ALA – ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இந்த ALA ஒமேகா அமிலம் உட்கொள்வதால் புரோஸ்டேட் புற்றுநோயை வர வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகப்படியான சியா விதைகள் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உதடுகள் அல்லது நாக்கில் அரிப்பு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளையும் ஏற்படுத்தும்.
உணவு ஒவ்வாமை என்பது உயிருக்கு ஆபத்தான நிலை, இது சுவாசிப்பதில் சிரமம், தொண்டை மற்றும் மார்பில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது.
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.