திமுக அமைச்சர்கள் மிரட்டல் விடுத்து கோவில்களை கைப்பற்றுவது அல்லது தலையிடுவது என்பது தமிழக அரசை டிஸ்மி செய்யலாம் என்று அர்த்தம் இன்று சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி மாநிலங்களில் உள்ள கோவில் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதற்கு காரணம் எதிர்ப்பது வருகிறார். மசூதி தேவாலயங்கள் அரச கட்டுப்பாட்டில் இல்லாத நிலைகள் 4 லட்சம் இந்த கோவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ளன .
கோவில்களை விடுதலை செய்ய நாட்டில் போராட்டங்களை நடத்த வேண்டும். இது குறித்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது.இந்த வழக்கில் வெற்றி பெற்றால்அனைத்து கோவில்களும் அரசாங்கத்தின் பிடியில் இருக்கும் வெளியே வரும் என பேசி இருந்தார்.
அதேபோல சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தலையிட்டபோது உச்ச நீதிமன்றத்திற்கு சென்று போராடி சிதம்பரம் நடராஜர் கோவிலை அங்கிருக்கும் பொது தீட்சிதர்களுக்கு சொந்தமானது தான் என உத்தரவு பெற்று கொடுத்திருக்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர போகிறேன். அதற்கு முன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து விடுகிறேன். இந்துவிரோத அணுகுமுறையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சமீபத்தில் நடந்த கனக சபை தரிசனம் தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கின்ற போது இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்க பணியாக இருக்கிறது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள், சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அரசியலமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படாத பட்சத்தில், அதை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்யலாம். தி.மு.க., அமைச்சர்கள் மிரட்டுவது போன்ற கோவில்களை கைப்பற்றுவது அல்லது தலையிடுவது, தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதாகும் என தெரிவித்துள்ளார்.