1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிளை திறப்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட தளர்வுகள் அல்லது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்திருந்த நிலையில் தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது குறித்தும் இந்த இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.