திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய 7 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப் பேற்றதில் இருந்து பல்வேறு அறிவிப்புக்களை வெளிட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதில் கோயில் நிலங்களை கையகப்படுத்துதல், பழைய நகைகளை உருக்குதல் மற்றும் தல மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் 7 கோவில்களில் முதலுதவி மருத்துவ மையங்களை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன்படி திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய கோவில்களில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது.