துவாக்குடியில் முதலமைச்சர் முக ஸ்டாலின்( MK Stalin) சென்ற வாகனம் நடுவழியில் பஞ்சர் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது kn நேரு ,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “வேளாண் சங்கமம் 2023” விழாவில்,கலந்துகொண்ட முதலமைச்சர் பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற 3 விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை வழங்கி,வாழ்த்தினார்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற வேளாண் சங்கமம்-2023 விழாவில், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்து, 12 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.
இதனையடுத்து திருச்சியில் நடைபெற்ற விழாவை முடித்து கொண்டு தஞ்சாவூரில் உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சாலை மார்கமாக புறப்பட்டார்.
அப்போது துவாக்குடி பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டு இருந்த போது முதல்வர் வாகனத்தின் பின்புற டயர் பஞ்சர் ஆனது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் KN நேரு உடனடியாக அனைத்து வாகனங்களை நிறுத்தி,தன்னுடைய வாகனத்தில் முதலவரை அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு முதல்வர் வாகனம் பஞ்சர் ஒட்டப்பட்டு 20 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மக்கள் நல பணிகளுக்கு சென்ற போது பஞ்சர் ஆன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.