விமான சாகசத்தின்போது 5 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது :
விமானப்படையின் சாகசம் இதற்குமுன் பல இடங்களில் நடந்துள்ளன; அங்கெல்லாம் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன; தமிழ்நாட்டில் திட்டமிட்டு செயல்படவில்லை; அரசின் கவனக்குறைவால்
5 உயிர்கள் பறிபோய் உள்ளன.
எவ்வளவு பேர் வருவார்கள் என உளவுத்துறை மூலம் தகவலை பெற்று அதற்கேற்ப அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் .
Also Read : போலி சான்றிதழ் மூலம் கிடைத்த அரசு வேலை – 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு..!!
குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத காரணத்தினால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்றுதான் லட்சக்கணக்கில் மக்கள் கூடினர்; உரிய ஏற்பாடுகளை செய்திருந்தால் உயிர் சேதம் ஏற்பாட்டிருக்காது.
விமான சாகசத்தின்போது 5 பேர் உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.