தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்துள்ளார்.
சிறு வயது முதல் தனது மயக்கவைக்கும் குரலால் பல்வேறு மொழிகளில் பல பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் பழம்பெரும் பாடகி பி.சுசீலா.
மனதை கவரும் குரலால் கட்டிப்போட்ட இவர் இதுவரை ஐந்து தேசிய விருதுகளையும், பல மாநில விருதுகளையும் பெற்று தென்னிந்திய சினிமாவின் வரலாறு படைத்த பாடகியாக திகழ்ந்து வருகிறார் .
தெலுங்கு, தமிழ் ,கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா ,சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் தனது 88 ஆவது வயதிலும் பூரண நலத்துடன் இருந்து வருகிறார் .
இந்நிலையில் தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு தமிழ்நாடு அரசின் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்துள்ளார்.
இதேபோல் கவிஞர் மு.மேத்தாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்துள்ளார்.