இந்தாண்டு அக்டோபர் நவம்பரில் அருணாச்சல பிரதேசத்தை சீனா கைப்பற்றும் என்று சுப்பிரமணிய சுவாமி(Subramanian Swamy) தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜி 20 மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா இங்கிலாந்து ஜெர்மனி எகிப்து உள்ளிட்ட 20கும் மேற்பட்ட நாடுகளில் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த மாநாட்டில் சீனா அதிபர் ஸி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ளவில்லை.முன்னதாக சீன அரசாங்கம் 2023ம் ஆண்டுக்கான புதிய நிலையான சீன எல்லை வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டு இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் ஒற்றை அங்கமாக காட்டப்பட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சீனா இந்தியாவில் அருணாச்சல பிரதேச ராணுவத்தை குறித்து வருவதாகவும், மேலும் மேம்பாலங்கள் ,சுரங்கங்கள் அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைகளை சீனா தனது படைகளை குவித்து வரும் செய்தி மோடி அரசு இருட்டடிப்பு செய்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில்,இந்த அக்டோபர்-நவம்பரில் நமது அருணாச்சலப் பிரதேசத்தை சீனா கைப்பற்றி திபெத்தை கைப்பற்றலாம். இதற்கிடையில் மோடி கண்ணாடியைப் பார்த்து,கொண்டு யாரும் நாட்டுக்கு வரவில்லை என ஏற்கனவே சிறந்து பாரத மக்கள் இடம் சொல்லி விடுவார்.
மேலும்,அருணாச்சல பிரதேசம்-சிக்கிம் செக்டாரில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது.சீன ராணுவம் அருணாச்சல எல்லையில் படைகளை திரட்டி வரும் செய்திகளை மோடி அரசு இருட்டடிப்பு செய்துள்ளது என்று சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.