சீனாவில் சிறுவர்களுக்கு ஆசிரியை ஒருவர் சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்ததில் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சீனாவின் ஹெனான் மாகாணம் ஜியான்சுவோ நகரில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளி ஒன்றில் வான் யுன் என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிது வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியை வான் யுன் தன்னிடம் பயின்ற 25 மாணவர்களுக்கு விஷத்தன்மை வாய்ந்த சோடியம் நைட்ரைட் கலந்த உணவை சாப்பிட கொடுத்துள்ளார்.
அதனை சாப்பிட்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், உடனயாக அவர்கள் அனைவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பள்ளி ஆசிரியை வான் யுன் சிறுவர்களுக்கு சோடியம் நைட்ரைட் கலந்த உணவை கொடுத்தது தெரியவந்தது. மேலும், வான் யுன் தனது கணவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தது தெரியவந்த நிலையில், அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் அந்த நாட்டின் நீதிமன்றம் அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு சிறுவன் சுமார் 10 மாதம் கழித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவன் உயிரிழப்பிற்கு காரணமான ஆசிரியை வான் யுன்க்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.