அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இந்திய எல்லைக்குள் சீன படையினர் 200 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாகவும், இந்திய ராணுவத்தால் சில சீன படையினர் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியா சீனா இடையே அருணாச்சலம், உத்தரகாண்ட், காஷ்மீர் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சில இடங்களில் ஏற்க மறுத்து வரும் சீனா அருணச்சால பிரதேசம் மற்றும் லடாக்கில் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எல்லையில் அவ்வப்போது சீனா அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் லடாக் தொடங்கி, அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா சீன எல்லைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது,
இந்த நிலையில் அண்மையில் திபெத்தில் இருந்து சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து, ஆளில்லா பதுங்கு குழிகளை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக சீன வீரர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் இந்திய வீரர்களால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.