அண்ணாத்த படத்தின் இரண்டாவது பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிற ‘அண்ணாத்த’. திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ், ஜெகபதி பாபு அபிமன்யூ சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இந்தப் படத்தின் அண்ணாத்த பாடல் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சாரக் காற்றே என்ற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
யுகபாரதி எழுதிய சாரக் காற்றே என்ற இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர்.
இதனை அறிவிக்கும் விதமாக ஊஞ்சல் ஒன்றில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா அமர்ந்து காதலுடன் பார்த்துக்கொள்வது போன்ற போஸ்டரை சன் பிக்சர்ஸ்ரை நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.