கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு , மயிலாடுதுறையில் உள்ள பேக்கரி ஒன்றில் சந்திரயான்-3 விண்கலம் வடிவிலான 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கேக் தயார் செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் வகையில் வருடம் தோறும் புதுமையான இனிப்பு ரகம் கொண்ட கேக்குகளை தயார் செய்து பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருடம் உலக மக்களை உற்று நோக்க வைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சந்தறயான்3 விண்கலத்தை நினைவு கூறும் வகையில் அந்த விண்கலத்தை போன்றே பிரம்மாண்ட கேக் வடிவமைத்து பேக்கரி கடை வாசலில் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த கேக் சுமார் 18 அடி உயரத்தில் பலவகை மூலப் பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது. பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கேக்கை மயிலாடுதுறையில் உள்ள ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில் :
சந்திரயான் 3 விண்கலம் உலக அளவில் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்ததது இதனை நினைவு கூறும் வகையில் அந்த விண்கலத்தை கேக்காக வடிவமைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கேக்கை தயார் செய்துள்ளோம் என தெரிவித்தார்.