தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் ஜெய் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு ,மலையாளம் ,கன்னட உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்களித்த பட்டம் லேடி சூப்பர்ஸ்டார். நயன்தாராவிற்கு கெரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று தான் ராஜா ராணி.
கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பிளாக் பஸ்டர் அடித்தது.காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ரெஜினா என்கிற கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். அவரின் காதலனாக ஜெய் நடித்திருந்தார். இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு ஜெய்யும், நயன்தாராவும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. முன்னதாக 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதனை உறுதி படுத்தும் விதமாக நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகர் ஜெய் கமிட் ஆகி உள்ளார். நடிகர் ஜெய்யின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார்.இந்த படத்தை இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தற்காலிகமாக லேடி சூப்பர்ஸ்டார் 75 என பெயரிடப்பட்டு உள்ளது.மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.