சினிமா காப்பாற்றப்பட வேண்டும்: “100 கோடி பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை” – நடிகர் போஸ் வெங்கட்!!

சிறிய பட்ஜெட் என்று நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம். 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை என நடிகரும் இயக்குனருமான போஸ் வெங்கட் கூறியுள்ளார்.

இதுகுறித்து போஸ் வெங்கட் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

“எங்கும் நசுக்கப்படுவது தான் ஏழ்மை.. இங்கு 100 கோடிக்கு மேல் பணம் இரைத்து தவறான படங்களை ஏன் எடுக்கிறீர்கள் என்று கேட்க ஆள் இல்லை.

மக்களுக்கு பிரயோஜனமான தேவையான அவசியமான திரைப்படங்களை எடுக்கும் கார்ப்பரேட்டுகளை கேள்வி கேட்காமல், பணத்தை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு வரும் தயாரிப்பாளர்களை தடுத்து நிறுத்துவது,

இங்கு இருக்ககூடிய ஏற்றத்தாழ்வு, சாதியக்கொடுமை, மன ரீதியான பிரச்சினைகள் ஆகியவற்றை சினிமாக்களாக அறிவுரைகளாக அக்கறையுடன் சொல்லும் அருமையான சிறு திரைப்படங்களை தடுப்பது என்பது ஒரு விதமான பாசிச மனப்பான்மை.

தமிழகத்தில் தடுக்கப்பட வேண்டிய சினிமா என்பது எடுக்க கூடாத சினிமா என்பது யாருக்கும் உபயோகமில்லாமல், எந்தவித பயனையும் எந்த மக்களுக்கும் அளிக்காமல் வெறும் பாக்கெட்டை நிரப்பும் சினிமாக்கள் மொத்தம் 4 பேர் பணத்தை எடுத்துக்கொண்டு பிரித்துச்செல்லும் அந்த புத்திசாலிகள் அவர்களைத்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாறாக சிறிய பட்ஜெட் என்று வெறுமனே வார்த்தைகளை பயன்படுத்தி நல்ல திரைப்படங்களை தடுப்பது என்பது நம் தமிழ் சினிமாவிற்கு நாமே தன் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கு சமம். இந்த பாசிச எண்ணம் யாரிடம் இருந்தாலும் அது தவறு” எனக் கூறியுள்ளார்.

Total
0
Shares
Related Posts