director bala | வணங்கான் படப்பிடிப்பில் இருந்து விலகிய காரணத்தை நடிகை மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்.
அருண்விஜய் நடிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான்.
இத்திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யா உள்ளதாக தகவல் வெளியான நிலையில் கருத்துவேறுபாடுகள் காரணமாக அவர் படத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து நடிகர் சூர்யா பதிலாக நடிகர் அருண்விஜய் தேர்வு செய்யப்பட்டார். அந்த திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார்.
அதில், “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்;
இதையும் படிங்க: ”வைதேகி காத்திருந்தாள்” பட நடிகையோட மகளா இது.. வைரலாகும் போட்டோ!
இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார்.
அப்போது “வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன்; அப்படத்தில் ஒரு பாடல் இருந்தது. அதற்கு பாடிக்கொண்டே ஆடவேண்டும். நான் அப்போதுதான் அதை கற்றுக்கொண்டிருந்தேன்;
இயக்குநர் பாலா என்னை அதை செய்துகாட்டும்படி கூறினார். அப்போது நான் அதற்கு தயாராகி இருக்கவில்லை அதனால் பாலா என்னை தோள்பட்டையில் அடித்தார்.
அப்போதே நான் அழுந்து கொண்டு அதிர்ச்சியில் பார்த்தேன்.. உடனே இயக்குநர் பாலா, ‘நான் அவ்வபோது திட்டுவேன், பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க’ என செட்டிலேயே சொல்லிவிடுவார்.
மேலும் சில சமயங்களில் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன். சூர்யா சார், ஏற்கெனவே அவரோடு படம் பண்ணியிருப்பதால் அவர் எப்படியென தெரிந்து வைத்திருந்தார்.
புதிதாக இணைந்ததால் எனக்குத்தான் தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1763475689746104503?s=20
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.நெட்டிசன்கள் பலரும் இயக்குநர் பாலாவிற்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்த நிலையில் நடிமை மமிதா பைஜூ தன் இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில்,“எனது தமிழ் சினிமா அனுபவம் குறித்து இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை.
திரைப்பட ப்ரமோஷன் நேர்காணலின் ஒரு பகுதி, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கும் மேலாக பாலா சாருடன் வேலை பார்த்துள்ள்ளேன். ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் என்னை வழிநடத்தினார்.
அந்தப்படத்தில் பணிபுரிந்த போது மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ எவ்வித தவறான அனுபவங்களையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
பிற தொழில்ரீதியான கமிண்மெண்ட்டுகள் காரணமாகவே அந்தப்படத்தில் இருந்து விலகினேன்” என குறிப்பிட்டுள்ளார்.