முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை தலைமை செயலகத்தில் நேற்றைய தினம் இரண்டு நிகழ்ச்சிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை பெசன்ட் நகரில் நடப்போம் நலன் பெறுவோம் என்ற திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்க இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.
இதனால் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலன் பெறுவோம் திட்டத்தை திட்டத்தை தொடக்கி வைத்தார். அவருடன் அமைச்சர் மா. சுப்பிமணியம் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருமலும் சற்று உடல்நல பாதிப்பும் இருந்த நிலையில், தற்போது வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் குறித்த மருத்துவ அறிக்கையை Madras ENT Research Foundation மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அந்த மருத்துவ அறிக்கையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் சில நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.