சென்னை ராயபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக தரப்படுகிறதா என முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழகத்தில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 29,114 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், மற்றும் 18,946 இலங்கை தமிழர் குடும்பங்கள் என 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, பயனாளி ஒருவருக்கு ரூ.505 மதிப்புள்ள 21 பொருட்கள் வழங்க ரூ.1,088 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில், பச்சரிசி, ரவை, முந்திரி, திராட்சை, கரும்பும் உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நியாயவிலைக் கடைகள் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான, டோக்கன் வழங்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்காம் தேதி தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாவட்டவாரியாக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதற்காக நியாயவிலைக் கடைகளிம் விடுமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை ராயபுரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக தரப்படுகிறதா என முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்விற்கு பின்னர் மாஸ்க் போடாத நபர்களுக்கு மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.