என்னுடைய கேள்விக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்லவில்லை முதலமைச்சர் மீண்டும் குற்றச்சாட்டி உள்ளார்.
3 நாள் பயணமாக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(mk stalin) காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீரை திறந்து வைத்துள்ளார். மேலும் ₹75.95 கோடியில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை 50% மானியத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.அப்போது செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தார்.
வேலூரில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், மத்திய அரசு என்ன செய்தது என கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பட்டியலுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்து இருந்தார். இதற்க்கு முதலமைச்சர் (mk stalin)பதில் அளித்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில் பாஜக செய்த சாதனைகளைக் கேட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியை சொல்கிறார்கள்.தமிழகத்திற்கு என எந்த ஒரு புதிய திட்டமும் பிஜேபி ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை.
திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஏராளமான திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன் அதை பட்டியல் இட்டு உள்ளேன்.இதற்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை
மேலும் ஜிஎஸ்டி அதிக நிதி தமிழ்நாட்டில் இருந்தாலும் கிடைக்கிறது.
ஆனால் மற்ற மாநிலங்களை விட குறைவான நிதியே தமிழகத்திற்கு ஒதுக்குகின்றார்கள்.மதுரை எய்ம்ஸ் அமைப்பதாக சொல்லி இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை..
இதற்கு அமித்ஷா என்ன பதில் சொல்லப் போகிறார்.தமிழரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது மகிழ்ச்சி.ஆனால் மோடி மீது என்ன கோபம் என தெரியவில்லை.2024 ஆம் தேர்தலில் தமிழகத்திலிருந்து பிரதமர் வேட்பாளராக தமிழிசை முருகன் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழர்களை பிரதமராகாமல் திமுக தடுத்தது என அமைச்சர் கூறியதற்கு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் வெளிப்படையாக சொன்னால் மட்டுமே விளக்கம் அளிக்க முடியும் என தெரிவித்தார்.