பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்(durga stalin) சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருகோயில் உள்ளது.இந்த கோவிலுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்(durga stalin) மதியம் 3 அளவில் கோவிலுக்கு சாலை மார்க்கமாக வருகை தந்தார்.
இதனையடுத்து ரோப் கார் மூலமாக மலைக்கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலினுக்கு (durga stalin) பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகரை வழிப்பட்டார். மேலும் கோவிலில் 12 அளவில் நடக்கும் உச்சிகால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமி கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.தற்பொழுது இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.