தைப் பொங்கலை முன்னிட்டு 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்குமாக சுமார் இரண்டு கோடியே 15 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய 20 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு சுமார் 2,15,48,060 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
மொத்தம் ஆயிரத்து 88 கோடி மதிப்பில் இந்த சிறப்புத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.