சந்தானத்துக்கு எதிராக சூரியா ரசிகர்கள்? ‘சபாபதி’ பட பிரஸ்மீட்-ல் சந்தானம் பேசியது என்ன?

Jaibhim-Anyone-can-speak-up-not-speak-down-Santhanam
Jaibhim Anyone can speak up not speak down Santhanam

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாபதி’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாசராவ் இயக்கி உள்ளார்.

சபாபதி திரைப்படம் நவம்பர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘ஜெய்பீம்’ சர்ச்சை குறித்து சந்தானத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சந்தானம், யாரை வேண்டுமானாலும் உயர்த்தி பேசலாம், ஆனால் தாழ்த்திப் பேசக் கூடாது. இளைஞர் சமூகத்திற்கு நல்ல சினிமாவைத் தர வேண்டும். 2 மணிநேரம் சாதி, மதம், இனம் என அனைத்தையும் மறந்து தியேட்டரில் உட்கார்ந்து மக்கள் படம் பார்க்கிறார்கள் எனில் அதற்கான படமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Jaibhim-Anyone-can-speak-up-not-speak-down-Santhanam
Jaibhim Anyone can speak up not speak down Santhanam

சந்தானத்தின் இந்த பேச்சு அவர் சேர்ந்த ஜாதிக்கு ஆதரவாகவும் சூர்யாவிற்கு எதிராக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் ட்விட்டரில் காலை முதலே #சாதிவெறி_சந்தானம் என்ற ஹெஷ்டக் சூர்யா ரசிகர்களால் டிரென்ட் செய்யப்பட்டது,

இதற்க்கு பதிலடியாக #WeStandWithSanthanam என்ற ஹெஷ்டக் சந்தானம் ரசிகர்களால் டிரென்ட் செய்யப்பட்டது.
மறுபுறம் #SuriyaAgainstVanniyars என்ற ஹெஷ்டக் பாமாகவினராலும் டிரென்ட் செய்யப்பட்டு வருகிறது.

Total
0
Shares
Related Posts