தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பணிகளைக் கண்காணித்திடவும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் முதன் முறையாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
சமீபத்தில் அமைச்சர்களை மாற்றம் செய்திருந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை கூடுவது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் , தொழில் முதலீடுகளுக்கு அனுமதி, டாஸ்மாக் கடைகள் குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மற்ற பணிகளைக் கண்காணித்திடவும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை – கே.என்.நேரு
தேனி – ஐ.பெரியசாமி
திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – எ.வ.வேலு
தருமபுரி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
தென்காசி – KKSSR ராமச்சந்திரன்
கன்னியாகுமரி – தங்கம் தென்னரசு
நீலகிரி – மு.பெ.சாமிநாதன்
கிருஷ்ணகிரி – சக்கரபாணி
கோவை – செந்தில் பாலாஜி
காஞ்சிபுரம் – ஆர்.காந்தி
பெரம்பலூர் – எஸ்.எஸ்.சிவசங்கர்
நாகை – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மயிலாடுதுறை – மெய்யநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.