தூத்துக்குடி -உச்சநீதிமன்ற ஆணைப்படி ஸ்டெர்லைட்(Sterlite) ஆலையிலிருந்து கழிவுகள் அகற்றப்படும் இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா கண்காணிப்பு மூலம் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் கழிவுகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து ஸ்டெர்லைட்(Sterlite) ஆலையில் ஜிப்சம், அபாயகரமான கழிவுகள் , மற்றும் ஆலையில் உள்ள பசுமை வளையம் பராமரிப்புகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்ற ஆணைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
ஆலை பராமரிப்பு பணிகள் தொடர்பாக சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் டிஎஸ்பி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உள்ளிட்ட 9-பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு கழிவுகளை அகற்றும் பணியை கண்காணிப்பு செய்வார் இதில் ஸ்டெர்லைட்(Sterlite) ஆலையை சேர்ந்த 2-நபர்கள் இருப்பார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை வைத்து பணிகள் நடைபெறும். இந்தக் கழிவுகள் எவ்வளவு காலத்தில் அகற்றப்படும் எத்தனை வாகனங்கள் தேவைப்படும் எவ்வளவு தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
இந்த பராமரிப்பு பணிகள் காலை 6-மணி முதல் மாலை 6-மணி வரை நடைபெறும். கழிவுகள் வெளியேற்றும் பணிகளுக்காக ஆலையில் உள்ள தொழிலாளர்கள் செல்லும் கதவுகள் மட்டும் திறக்கப்பட்டு அந்த கேட்டில் சிசிடிவு கேமரா பொருத்தப்பட்டு.
24 மணி நேரம் கண்காணிக்கப்படும் இந்த கழிவுகள் அகற்றும் பணியின் போது 24-மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வாரம் ஒருமுறை ஆலையில் எவ்வளவு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கண்காணிப்பு குழு அழிக்கும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் துணை ஆட்சியர் கௌரவ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.