சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 268 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 268 ரூபாய் உயர்ந்து 2,133 ரூபாயாக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி .915.50ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவகங்களில் உணவுப் பண்டங்களின் விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.