தூத்துக்குடியில் உள்ள தேவாலயம் (church premises) ஒன்றில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தரப்புக்கு ஆதரவாக கூட்டம் நடத்த முயன்ற பாதிரியார் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்தால் அவரை சிறை பிடித்த நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி சி.எஸ்.ஐ தேவாலயத்தில் (church premises), நாசரேத் திருமண்டலத்தில் லே செயலாளர் கிப்சன் தரப்பினர் ஒரு பிரிவாகவும் எஸ் டி கே ராஜன் பிரிவினர் ஒரு பிரிவாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கிப்சன் தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பாதிரியார் செல்வின் துரை என்பவர் பரிபேதுரு சி.எஸ்.ஐ தேவாலயத்தில். ரகசிய கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களான எஸ் டி கே ராஜன், தேவராஜ் , கோயில்பிச்சை, ரூபன் வேதா சிங் ஆகிய நான்கு பேரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க வேண்டுமென திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனால், அவர்களது ஆதரவாளர்கள் பாதிரியார் செல்வின் துரையை மறித்து கூட்டம் நடத்தவிடாமல் விரட்டினர்.
அதனைத் தொடர்நது, மற்றொரு தரப்பினரான எஸ் டி கே ராஜன் தரப்பினர் பாதிரியார் செல்வின் துரை மீது பாலியல் புகார்களை தெரிவித்தனர். அப்போது, திடீரென இரா ஹென்றி என்ற நபர், பாதிரியாரை பார்த்து “சண்முகபுரத்தில் அந்த வீட்டுக்குள்ள நீ படுத்து கிடந்தல்ல”… என்று பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து உரக்க சத்தமிட்டபடி பாதிரியாரை விரட்டிச் சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், இரு சக்கர வாகனத்தில் வெளியே செல்ல முயன்ற பாதிரியார் செல்வின் துரையை வெளியே செல்லவிடாமல் இருசக்கர வாகனத்தின் சாவியை பறித்து வைத்துக்கொண்டு அவரை வழிமறித்தனர்.
இதனால், பாதிரியார் செல்வன் துறையை எஸ் டி கே ராஜன் அணியினர் பிடித்ததால், அவர் வெளியே செல்ல முடியாமல் அவரது அறைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு, இரு தரப்பினரிடையே காவல்துறையினர் முன்னிலையிலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது. மேலும், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து திட்டமிடப்பட்ட ரகசியக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலய வளாகத்திலேயே இருதரப்பினரும் மோதலில் ஈடுபட்ட இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.