டெல்லியில் இன்று மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு (congress meeting) கூட்டம் தொடங்கியுள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி சச்சின் பைலட் , ஜெயராம் ரமேஷ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு இந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது .
அந்தவகையில் ஒப்புதல் பெற இருக்கும் சில முக்கிய தகவல்கள் கீழே பார்க்கலாம் :
- ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் வழங்கும் காங்கிரசின் தேர்தல் வாக்குறுதிக்கு ஒப்புதல் பெறப்படுகிறது
- அரசுப் பணிகளில் மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, அதிகபட்ச இடஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பதற்கும் ஒப்புதல் பெறப்படுகிறது
- 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ₹400ஆக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதிக்கும் ஒப்புதல் பெறப்பட உள்ளது
- காங்கிரஸ் கட்சியின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் தேர்தலில் இம்முறை தங்களது பலத்தை முழுமையாக காட்ட (congress meeting) வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட ஏரளமான கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இறுதியில் என்ன நடக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.