ராகுல்காந்தியைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் பயணம் மேற்கொண்டுள்ள சோனியா காந்தி ஸ்ரீநகரில் உள்ள ஏரியில் படகு பயணம் மேற்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னதாக, காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல்காந்தி தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, லடாக்கின் யூனியன் பிரதேசத்தில் உள்ள பாங்காங் ஏரிக்கு சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்றார்
அங்கு சென்ற பின்னர் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், லடாக்கின் பாங்காங் ஏரி பகுதிக்கு சென்றார். மேலும், லடாக்கில் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு லடாக்கின் கார்கில் இருந்து சாலை வழியாக காஷ்மீரின் கன்டர்பெல் மாவட்டத்திற்கு சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்தார் ராகுல்காந்தி. அதன் பின்னர் ஸ்ரீநகரில் உள்ள நிகீன் ஏரியில் படகு பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், தற்போது ராகுல் காந்தியை தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் காஷ்மீர் சென்றுள்ளார். ஸ்ரீநகரில் இன்று அவர் ராகுல்காந்தியை சந்திக்கிறார்.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஏரியில் சோனியா காந்தி படகு பயணம் மேற்கொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.