G20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு எம்.பி. ப.சிதம்பரம் (p.chidambaram) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 18வது G20 உச்சி தொடங்கி உள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
2 நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து,ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் உள்ளிட்டோருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்பதற்காக அனைத்து முக்கிய தலைவர்களும் குடியரசு தலைவர் அழைப்பிதழ் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில்,குடியரசு தலைவர் அளிக்கும் இரவு விருந்திற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் G20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளிக்கும் விருந்துக்கு எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்காததற்கு எம்.பி. ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
, “ஒன்றிய அரசின் நடவடிக்கையை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை; ஜனநாயகமில்லாத அல்லது எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டில்தான் இதுபோன்ற செயல்கள் நடக்கும். அதாவது பாரதம், ஜனநாயகமும் எதிர்க்கட்சியும் இல்லாமல் போகும் நிலையை எட்டவில்லை என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.