கர்நாடக மாநில முதலமைச்சராக தேர்வு செய்யபட்ட சித்தரமையாவுக்கு தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(MK stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கர்நாடகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. சித்தராமையா அவர்களுக்கும், துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு. டி.கே. சிவகுமார் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
மதச்சார்பின்மையைப் போற்றும் இவ்விருவரும் தங்கள் திறமையான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மாநிலத்தைப் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார்கள் என உளமார நான் நம்புகிறேன்.
தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியலானது இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும். அத்தகைய மாற்றத்தை முன்னறிவிக்கும் மணியோசைதான் பெங்களூரில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழா என்று தெரிவித்துள்ளார்.