நகைச்சுவை நடிகர் சதிஷ் தற்போது ஹீரோவாக நடித்துள்ள கான்ஜுரிங் கண்ணப்பன் எனற படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சதிஷ் தற்போது ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் நாய் சேகர் என்ற திரைப்படம் வெளியாகியது. இந்த படம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சதிஷ் கான்ஜுரிங் கண்ணப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் திரைப்படத்தை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நகைச் சுவை கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் சதிஷுடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லீ, எல்லி அவ்ரம், ரெஜினா கஸாண்ட்ரா, விடிவி கணேஷ், ஜேஸன் ஷா உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் ஹாரர் படம் போல தொடங்கும் ட்ரெய்லர் அதன்பிறகு சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்த்ராஜ், காமடியால் கலகலப்பாக மாறுகிறது.