சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ருபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று மேலும் ரூ.15 விலை உயர்த்தப்பட்டு இருப்பது சாமானிய மக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணை விலையின் அடிப்படையில், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதுபோல சமையல் எரிவாயு விலை 15நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, ‘சிலிண்டர்’ விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் சிலிண்டர் விலை ரூ.915க்கு விற்பனை செய்யப்படுகிறது.வணிக ரீதியான 14.2 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி 610 ரூபாயாக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வீட்டு சிலிண்டரும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.