காவலர்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது என்றும் பொதுமக்களுக்கு அரணாக விளங்கும் காவலர்களுக்கு உரிய மரியாதை தருவது அரசு வழக்கறிஞர்களின் கடமை என மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :
அரசு வழக்கறிஞர்கள் அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக வரும் காவலர்களை மரியாதை குறைவாக நடத்தக் கூடாது . பொதுமக்களுக்கு அரணாக விளங்கும் காவலர்களுக்கு உரிய மரியாதை தருவது அரசு வழக்கறிஞர்களின் கடமை.
காவலர்களுக்கும் பணிச்சுமை, மன உளைச்சல் இருக்கும் என்பதை மனதில் கொண்டு மனிதநேயத்தோடு அவர்களை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுக்கும் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.