இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா.. – கடந்த 24 மணி நேரத்தில் வந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து காணப்பட்டது.

நேற்று 9,195 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 13,154 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 82,402 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது 0.24 சதவீதம் ஆகும். கொரோனாவுக்கு 268 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,80,860 ஆக உயர்ந்து உள்ளது. 3 கோடியே 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இது 98.38 சதவீதம் ஆகும்.

கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழலில், இன்று 10 ஆயிரம் எண்ணிக்கையை கடந்து பாதிப்புகள் பதிவாகியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Total
0
Shares

Comments are closed.

Related Posts