பளுதூக்கு போட்டியில் பதக்கம் வென்ற திமுக எம்.எல்.ஏ – குவியும் பாராட்டு..!

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராஜாவும் விளையாட்டு வீரராகச் சிறந்து விளங்கி வருகிறார்.

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரான தி.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா, சமீபத்தில் பளுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் வெற்றி பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானார்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் போட்டிகள் நடைபெற்று வரும் ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில், இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ராஜா. இதில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் தற்போது வெண்கலப்பதக்கம் வென்று வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Spread the love
Related Posts