தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனை அடுத்து கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், விருதுநகரிலும் கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவையை அடுத்து தற்போது தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது, குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் கொரோனா அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,912 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல் வணிக வளாக கடைகளில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.