தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்படுகின்றன.
கடந்த 2019-ம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே, உறுப்பினர்களில் ஒருசிலர் உயிரிழந்ததாலும் பதவி விலகியதாலும் பதவிகள் காலியாகின. இந்த பதவியிடங்களுக்கு கடந்த 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி ஜூன் 27ம் தேதிடன் முடிவடைந்ததை தொடர்ந்து, 28ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. இந்த நிலையில் 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆயிரத்து 22 வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 19 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்படுகின்றன. அதிமுக சார்பில் வேட்பாளர்களுக்கான படிவம் ஏ மற்றும் பி-யை அதிமுக தலைமை வழங்காததால், சுயேச்சையாக போட்டியிட்டனர். இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்படுகின்றன.
அதனைத் தொடர்ந்து, விரைந்து முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.