துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி பாம் சரவணனை ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கத்தில் பிரபல ரவுடிகள் வழக்கறிங்கர்கள் என இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆம்ஸட்ராங்கின் நெருங்கிய நண்பரான பாம் சரவணன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க திட்டம் தீட்டி வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில் நேற்று அவரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
Also Read : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியில்லை – என்.ஆனந்த் அறிவிப்பு..!!
சென்னையில் உள்ள பிரபல ரவுள்களில் ஒருவராக வலம் வந்த பாம் சரவணன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் பல நாட்கள் அவர் தலைமறைவாக இருந்துவந்த நிலையில் அவரது போலீசார் சுட்டு பிடித்தனர்.
இந்நிலையில் குண்டடிபட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணன் காணொளி காட்சி மூலம் இன்று சென்னை எழும்பூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.