கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை 96 நாடுகள் அங்கீகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள மன்சுக் மாண்டவியா, நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் பொது மக்களுக்கு செலுத்தி வருகிறோம் என்றும், இதுவரை 109 கோடி பேருக்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தது மட்டுமல்லாமல், உலக அளவில் 96 நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அதன் படி கோவிஷீல்டு, கோவாக்ஸின் செலுத்திக் கொண்டவர்கள் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 96 நாடுகளில் அனுமதிக்கபடுவர்கள் என்று தெரிவிக்கபட்டுள்ளது.