தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி பள்ளியில், மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 2,765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 93 ஆயிரத்து 599 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,011 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 12 மாணவர்களுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
170 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்குட்பட்டவர்கள், என்றும் மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாகம் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளின் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.