உலகம் முழுவதும் கொரோனா கடந்த ஒன்றரை வருடங்களாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட 5 மாகாணங்களில் 3 முதல் 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ல் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ள சூழ்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் நிலையில், குழந்தைகளுக்கும் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹூபெய், புஜியான், ஹெனான், ஸீஜியாங், ஹூனான் ஆகிய 5 மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என மாகாண அரசுகள் தெரிவித்துள்ளன.